(சசி, துறையூர் தாஸன்)
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட் /பட்/ துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவன் திருச்செல்வம் கேதீஸ் மாவட்டமட்டத்தில் கலைப் பிரிவில் முதலிடம்; பெற்று சாதனை புரிந்துள்ளார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான போக்குவரத்து வசதியற்ற யானைகட்டியவெளியில் நாமகள் வித்தியாலயத்தில் மறைந்த அதிபர் புவிராசாவின் கீழ் தனது கல்வியைத் தொடர்ந்து துறைநீலாவணையில் உயர்தரம் படித்து தன்னையும், தனது கிராமத்தினையும் சமூகத்திற்கு வெளிக்காட்டி பெருமை சேர்த்துள்ளார்.
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு பல கஸ்ரத்தின் மத்தியில் இக் குக்கிராமத்தில் இருந்து தன்னை வளர்த்து இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றாரான திருச்செல்வம், சரஸ்வதி ஆகியோருக்கும் . மேலும் கல்வியில் இந் நிலையினை அடைய வழிகோலிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.