ஆலையடிவேம்பில் மாடுகளைத் திருடும் கும்பல் கைது

அம்பாறை – ஆலையடிவேம்பு பகுதியில் மாடுகளைத் திருடும் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏனைய பகுதிகளில் திருடப்பட்ட மாடுகளை ஆலையடிவேம்பு பகுதிக்குக் கொண்டு சென்று சந்தேகநபர்கள் விற்பனை செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களால் கடத்திச்செல்லப்பட்ட 5 மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவரும் ஆலையடிவேம்பு மற்றும் தங்காலை பகுதிகளைச் சேர்ந்த இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகளவில் மாடுகள் கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.