காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர், ஏனைய பிரதேசங்களில் இடிமுழக்கத்துடன் மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் - குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் - 75 மில்லி மீற்றரைத் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகலாம். வடக்கு, தெற்கு மாகாணங்களில் ஓரளவு காற்று வீசும்.

மேற்கு, வடமேல், மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுமென திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.