ஆலையடிவேம்பில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 2018 ஆண்டில் புதிய வகுப்புக்களுக்குச் செல்லவுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (22) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் தலைமையில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி வசந்தகுமார் ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை அங்கே பகிர்ந்தளித்திருந்தனர்.