
(சசி)
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா மாவட்டமட்டத்தில் முதலிடம்; பெற்று சாதனை புரிந்துள்ளார். மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த விஜயராசா மதிமலர் அவர்களின் மகள் இவ்வாறு வணிகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். சாதாரண கூலித் தொழிலாளியின் மகள் வறுமையிலும் சாதனை புரிந்து தனக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
சாதனை புரிந்த சஜானி இச் சாதனை புரிந்ததற்கு உறுதுணையாக இருந்த பெற்றாருக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.












