மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை மகா.வி மாணவன் உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவில் முதலிடம் பெற்று


(சசி)
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு பட் /களுதாவளை மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் மாவட்;டமட்டத்தில் முதலிடம்; பெற்று சாதனை புரிந்துள்ளார். மட்டக்களப்பு திருப்பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த  கணேசமூர்த்தி இராசலெட்சுமி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவில  முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். விவசாயத்தை சீவனோபாயமாகக் கொண்ட சாதாரண விவசாயக் குடும்பத்தின் மகன் வறுமையிலும் சாதனை புரிந்து தனக்கும், கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
சாதனை புரிந்த துதிசான்;  இச் சாதனை புரிந்ததற்கு உறுதுணையாக இருந்த பெற்றாருக்கும், கற்பித்த பாடசாலை நித்தியகுமார்;, சிரோத்பவன், சங்கரி ஆசிரியர்களுக்கும், முக்கியமாக வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்த ரமேஸ், திலிபன் ஆசிரியர்களுக்கும் மற்றும் இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இவருக்கு battinews சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.