அக்கரைப்பற்று கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலத்தின் பாராட்டு கௌரவிப்பு மற்றும் புதிய கட்டிட திறப்பு நிகழ்வு புதன்கிழமையன்று பாடசாலை அதிபர் இராசவேல் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் , பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி ரீ. ராஜசேகர் , என்.வரணியா , வா.குணாளன் , உதவிகல்வி பணிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
இதன் போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெறறதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வெறறிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
























