மட்டு. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் சிரமதானப் பணி

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் 2018 ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் சிரமதானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.



இதற்கமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31ஆம் திகதி) பாடசாலை ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் சிரமதானப் பணியின்ம மூலம் பாடசாலை மற்றும் பாடசாலை வளாகம் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இச் சிரமதானப் பணியில் பாடசாலை அதிபர், பிரதிஅதிபர் போன்றோரும் கலந்துகொண்டனர்.