தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தைத்திருநாள் பொங்கல் விழா


தமிழர் தம் புதுவருடப் பிறப்பாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் வவுணதீவு நாவற்காடு பிரதான வீதியும், பாடசாலை வீதியும் இணையும் சந்தியில்  இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டு பொங்கற் பேருரை நிகழ்த்தவுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், உள்ளுர் அதிகார சபைகள் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இப் பொங்கல் விழாவில் 'ஓரணியில் திரள்வோம் ஒற்றுமையாய் உழைப்போம்' எனும் தலைப்பிலான கவிதை அரங்கம் கவிஞர் அண்ணாதாஸன் தலைமையிலும், 'இன்றைய சமூக மாற்றம் கட்டுக் கோப்புடன் செல்கிறது, கட்டு மீறிச் செல்கிறது' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றக் குழுவின் ஏற்பாட்டிலும் இடம்பெறவுள்ளதுடன், நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவர்களால் நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.