ஆயர் அவர்களின் மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்பதின் கருத்தை மக்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டும். இந்திரஜித் ஸ்ரீபன்.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு 1ம் வட்டார மக்கள் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் கருத்தரங்கு இந்திரஜித் ஸ்ரீபன் தலைமையில் தனியார் வீடொன்றில் (11) நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராக  பெரியகல்லாறு
வட்டாரத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பானளரான செல்லத்துரை கனகசுந்தரம் கலந்து கொண்டார். அவரை வரவேற்று அறிமுகப்படுத்தி பேசிய இந்திரஜித் பின்வருமாறு குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது. எமது வட்டாரத்தில் பொருத்தமான வேட்பாளராக கனகசுந்தரம் போட்டியிடுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இன்றைய அரசியல் சூழலில் எமது ஏக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்மைப்பே இருக்கின்றது. தந்தை செல்வாவால் உருவாக்கப்ட்ட தமிழரசுக் கட்சியின் சார்பாக அவர் களம் இறங்கிகிருப்பது எமக்கு கிடைத்த கௌரவமாகும்.

எனவே அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்வது எமது மக்களின் கடமையாகும். ஓரு வாக்கும் தவறாமல் அவருக்கே அளிக்கப்பட வேண்டும். சமூக சேவையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் அவரை பிரதேச சபைக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எமது கிராமத்தின் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்யலாம்.

அண்மையில் எமது மாவட்ட  ஆயர் அவர்கள் பத்திரிகையில் தேர்தல் சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்கள் வாக்குகளை கவனமாக பயன்படுத்துங்கள் என்று இரத்தினசுருக்கமாக கூறியுள்ளார். அதன் சுருக்கம் போலிகளுக்கு வாக்களித்து ஏமாறாமல் பொருத்தமானவர்களுக்கு வாக்களியுங்கள் என்பதாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். எனவே அவரின் இந்த நல்ல கருத்தை உள்வாங்கியபடி வாக்களிப்பு நிலையத்திற்கு நேரகாலத்தோடு சென்று வீட்டுக்கு நேரே பள்ளடி இடுவதன் மூலம் எமது வட்டாரத்திற்கு பொருத்தமான ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொள்வதே எமது தலையாய கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வேட்பாளர் தனதுரையில் பின்வருமாறு தெரிவித்தார். நான் இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளின் கட்டளையை ஏற்று இந்த தேர்தலில் நிற்கின்றேன். தந்தை செல்வாவின் ஆன்மாதான் என்னை வழிநடாத்திக் கொண்டிருக்கின்றது. எனவே நான் வெளிப்படையாகவே, அரசியல் நேர்மையோடு நடந்து கொள்ளுகின்றேன்.எவ்வித போலித்தனமும் என்னிடமில்லை.

மக்களை ஏமாற்றி நிறைவேற்ற முடியாத  பொய் வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற வேண்டும் என்பதற்கான அவசியம் எனக்கில்லை. நேர்மையாக வெற்றி பெற வேண்டும் என்பதே எனது இலட்சியம்.

தமிழ் மக்களின் பாரம்பரி அரசியல் சின்னமான வீடே எனது சின்னம். வீடு என்பதும் சூரியன் என்பதும் ஒரே கட்சியின் சின்னம்தான் என்ற தவறான பிரசாரம் எமது பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் முட்டாள்களல்ல. தற்போதைய அரசியல் தெரியாதவர்களும் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி ஈபிஆர்எல்எப் கட்சி உதயசூரியன் சின்னம் ஏந்தி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முற்றிலும் எதிராகச் செயற்படுகின்ற கட்சிக்கு, வீடு இல்லாவிட்டால் விமோசனம் இல்லை என்பதை அவர்களே ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதையே அவர்களின் தவறான பிரசாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எனவே வீட்டுக்குள்ள செல்வாக்கு கண்டு அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. எனவே எமது வெற்றியை அவர்களே உறுதிசெய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. வீடுதான் பலருக்கும் அரசியல் முகவரி கொடுத்தது என்பதை எவரும் இலகுவில் மறுந்துவிடவும்; முடியாது.
எனவே நீங்;களும் மறந்துவிடாமல் வெற்றியின் சின்னமான வீட்டிற்கு கௌரமளித்து உங்கள் பொன்னான வாக்குகளால் அதற்கு தூய பூஜை செய்து எனக்கு அதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன் என்று குறிப்பிட்டார்.