பலவீனமான பாதையில் கிழக்கு மாகாண தமிழர் அரசியல்: தமிழ் தலைமைகளின் தவறா? மக்களின் பலவீனமா? கருத்திற்கான களம்

ஊள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாடெங்கிலும் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழர் பிரதேசங்களிலும் அவ்வாறான நிலையை உணரக் கூடியதாய் இருக்கின்றது. இந்நிலையில் கட்சிசார்  அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்கள்சார் அரசியல் நிலைபற்றி ஆராயப்பட வேண்டிய தருணம் கிழக்கு மாகாணத்தில் அதிமுக்கியம் பெற்றுவிட்டதாய் உணரப்பட்டுள்ளது. ஆனாலும் கட்சி அரசியல் என்பது மக்கள் நலன்சார் அரசியலை மையப்படுத்தியதே என்ற நிலைப்பாட்டுடன் இருப்பவரும் உளர். ஏனெனில் தூய அரசியலில் மக்கள் நலனை பிரதிபலிப்பதாகவே கட்சி அரசியல் நிலைமாற்றம் பெறும். இந்த அறிமுகத்துடன் ................

இனி கிழக்கு மாகாண தமிழர் அரசியலை நிலைப்படுத்தி சில வினாக்கள் அனைவரின் சிந்தனைக்கு?

  • கிழக்கு மாகாணத்தின் தமிழர் அரசியல் போக்கு சரியான பாதையில் பயணிக்கின்றதா?
  • கிழக்கு மாகாண தமிழர் அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுள்ளதா?
  • உரிமைக்கான அரசியல் கொள்கையில் இருந்து நாம் தளர்வடைந்து செல்கின்றோமா?
  • தமிழ் தலைமைகளின் வழிகாட்டல் பாதைகள் ஆரோக்கியமானதாக இருக்கின்றதா?
  • பெரும்பான்மைக் கட்சிகளின் செல்வாக்கும் அதனூடான பிரதிநிதித்துவமும் தேவை என உணரப்படுகிறதா?
  • மாற்றுத் தமிழ்க் கட்சிகள் அல்லது சுயேட்சைகளின் வரவு ஆரோக்கியமான சமிக்ஞையா?


இந்த வினாக்களை உங்களின் சிந்தனைக்கு விட்டு மீண்டும் தொடரும் இப்பந்தி..................

கோ. சிவதாசன்