மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் பொங்கல் விழா

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வான பொங்கல் விழா பிரதேச சபை முன்றலில்   வெள்ளிக்கிழமை (26-01-2018) காலை இந்து கலாச்சார முறையில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் திரு. கந்தையா லட்சுமிகாந்தன் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம முகாமைத்துவ உதவியாளர்    திருமதி. பு. குணசேகரம், உள்ளூராட்சி உதவியாளர்  பெ. ரவிசூடி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.


இதன் போது பொங்கல் பொங்கி படைத்து, சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது. இவ் பொங்கல் நிகழ்வின் போது விவசாயிகள் மற்றும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும், தமிழர்களின் கலை கலாச்சாரத்தினை வளர்க்கும் முகமாகவும் களுதாவளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இன மத வேறுபாடுன்றி பொங்கல்விழா மிக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதாக பிரதேச சபை செயலாளர் க. லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.