கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் – அந்தியவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஏறாவூர்ப்பற்று-சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் 57வயதுடையவர் உயிரிழந்தார்.
தைப்பொங்கல் தினமான நேற்று வயல் பகுதிக்கூடாக வரும்போதே காட்டு யானைத் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கணவனுக்கு பொங்கலை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்ற மனைவி, காட்டுப் பாதையில் தனது கணவர் அணிந்து சென்ற பாதணிகள், அவர் காவிச் சென்ற குடம், பை உட்பட அனைத்துப் பொருட்களும் சிதறிக்கிடப்பதைக் கண்டு ஏதோ ஆபத்து நடந்திருப்பதை உணர்ந்து அருகிலுள்ள வயல்வாடிக்காரர்களை அழைத்து புதர்களுக்கள் தேடிப் பார்த்த போது கணவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துக் கிடப்பதை கண்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.