மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தொடர்ந்து மூன்று(03) ஆண்டுகளாக, ஞானசூரியம் சதுர்க்க வட்டாரத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 26-01-2018 வெள்ளிக் கிழமை ஆலய முன்றலில், ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.ரா.கோணேஸ்வரன், உப தலைவர் திரு.க.கிருஸ்ணாநந்தன் ஆகியோரின் இணைத்தலைமையிலும் , பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மா.உதயகுமார் அவர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக நிகழ்வு நடைபெற்றது.இன் நிகழ்வானது ஆலயத்தை சூழவுள்ள அன்பர்களின் உதவியினாலும், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலிலும், ஞானசூரியம் சதுர்க்க வட்டாரத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் பெற்றோரும், மாணவர்களுமாக கலந்துகொண்டனர். இன் நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உப தலைவர் அவர்களினால் மாவட்ட செயலாளரினை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலாளர் தமது உரையில் மாணவர்கள் தமது நோக்கத்தை வரையறுத்து அதனை அடையும் பொருட்டு கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு நோக்கத்தை அடையவேண்டும் என்று தமது உரையில் குறிப்பிட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தார். பின்பு விழா இனிதே நிறைவு பெற்றது.





















