காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

ஏறாவூர் வெள்ளைக் கல்மலைப் பகுதியில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் 51 வயதுடைய முத்துலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது காட்டிற்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று தாக்கியதில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

பொழுது புலர்ந்த வேளையிலேயே இவர் கொல்லப்பட்ட விடயம் அயல் வாடிகளிலிருந்தவர்களுக்குத் தெரியவந்ததையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.