வவுணதீவு பிரதேச செயலகத்தில், உழவர் திருநாள் பொங்கல் விழா

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் உழவர் திருநாள் பொங்கல் விழா பிரதேச செயலக வளாகத்தில்  மிக கோலாகலமாக நடைபெற்றது.


சூரிய பகவானுக்கும் உழவருக்கும் நன்றி கூறும் வகையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சாளம்பைக்கேணி ஶ்ரீ சித்திவினாயகர் ஆலயத்திலிருந்து  பூசைப் பொருட்கள், பொங்கலுக்கான அரிசி போன்றவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் பிரதான பொங்கல் பானையினை ஏற்றி வைத்தார்.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ,தனுஷியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது பிரதேச செயலகத்திலுள்ள ஒவ்வொரு சேவைப் பிரிவுகளுடன், இப் பிரதேசத்திலுள்ள 24 கிராமங்களிலிருந்தும் வருகைதந்த 24 கிராம மட்ட அமைப்புக்களும் பொங்கல் பொங்கி விழாவினை சிறப்பித்தனர்.

இதன்போது கலை நிகழ்வகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றது.