7 ஆசனத்தை எடுத்த முஸ்லிம் காங்கிரசுக்கு மாகாணசபையை தூக்கி கொடுத்தவர்கள் த.தே.கூ : கருணா அம்மான்

ஏழு ஆசனத்தை எடுத்த முஸ்லிம் காங்கிரசுக்கு மாகாணசபையை தூக்கி கொடுத்து முதலமைச்சர் ஒருவரை உருவாக்கியவர்கள்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் .

இதை பயன்படுத்தி முஸ்லிம்கள்   நான்கு வருடத்திலும் அவர்களது சகல   பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து முன்னேற்றி விட்டார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார் .



தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறுகையில்

கிட்டத்தட்ட 4500 முஸ்லிம்களுக்கு  வேலைவாய்ப்புக்கள் வழங்கியுள்ளனர் ,  பாடசாலை ஆசிரியர்கள் , உதவியாளர்கள் இது போல   மற்றும் பல திணைக்களங்களில்  சிற்றூழியர் தொடக்கம் எல்லா இடத்திலேயும் முஸ்லிம்கள்  வேலை செய்வதை பார்க்கலாம் .

முஸ்லிம்கள்  ஊருக்கு ஒரு அமைச்சரை வைத்துகொண்டு அவர்களது ஊர்களை அபிவிருத்தி செய்கின்றனர் , காணிகளை பிடிக்கின்றனர்  இதே நேரம் நம்மவர்களை பாராளமன்றத்திற்கு அனுப்பினால் ஒன்றுமே செய்யாமல் திரும்ப திரும்ப வாக்கு கேட்டு வருகின்றனர் .

ஒரு எதிர்கட்சி வரவு செலவு திட்டத்திற்கு வேற எந்த நாட்டிலையும் வாக்களிக்க மாட்டார்கள் ஆனால் இங்கு சம்பந்தன் அவர்கள் வாக்களிக்க கை உயர்த்துகிறார்.  இப்படி அரசாங்கத்துக்கு ஆதாரவாக  இருக்கிறவர்கள் இரண்டு அமைச்சு பதவியை எடுத்து தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யலாமே . அப்படி செய்யமாட்டார்கள் மக்களை திரும்ப திரும்ப ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்  என கூறினார்