பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு - 2018


[Narthanan.R]

லண்டன் லூசியம் சிவன் கோயில் அறங்காவலர் சபை அங்கத்தவர்களால்  மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு-2018 வானது.  இப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இம்முறை ஐந்தாவது வருடமாக இந்நிகழ்வை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் திரு.சோ.சிவலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, துளசி மண்டபத்தில் நேற்றைய தினம்  31.01.2018 ஆந் திகதி புதன்கிழமை 9.00 மணியளவில்  நடைபெற்றது .

இன் நிகழ்விற்கு  பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு க. பாஸ்கரன் அவர்களும், சிறப்பு அதிதியாக இலண்டன் சிவன் கோயில் அறங்காவலர் சபை உறுப்பினரும், இலண்டனில் தொழிலதிபருமாகவுள்ள 'சிவகாமி பவண்டேசன்' அமைப்பின் ஸ்த்தாபகர் திரு ச.பரமேஸ்வரன் அவர்களும். திரு அதிதிகளாக மூதூர் வலயக்கல்வி அலுவலக ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு செ.லோகராஜா, மட்டக்களப்பு, கல்லடி-உப்போடை, சாரதா சிறுவர் முன்பள்ளி அதிபர் திருமதி . இந்திராணி புஸ்பராஜா, தம்பிலுவில், திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர், திரு கண.இராசரெத்தினம், மண்டூர், சங்கர்புரம், சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் திரு பே.யோகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்


இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்ட அனைவரக்கும், 'சங்காரவேல் பவுண்டேசன்' அமைப்பினரால் அவர்களது சமூகப்பணி, கல்விப்பணி போன்றவற்றைப் பாராட்டிக் கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்தில் 56 பல்கலைக்கழக மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுகின்றார்கள். இவர்களில் இரண்டு பொறியியலாளர்கள் தங்களது கல்வியைப் பூர்த்தி செய்து தற்போது தொழில் புரிகின்றார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். இவர்களுக்கு மருத்துவத்துறைக்கு மாதாந்தம் 8000.00 யும், பொறியியல்துறைக்கும் சட்டத்துறைக்கும் மாதாந்தம் 7000.00 யும் அவர்களது கல்வி நடவடிக்கைகள் முடியும் வரைக்கும் இப்புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது 
.
இதற்குரிய புலமைப் பரிசில் நிதியினை லண்டன் லூசியம் சிவன் கோயில் அறங்காவலர் சபை அங்கத்தவர்களான சிவகாமி பவுண்டேசன் ஸ்த்தாபகர் திரு/திருமதி பரமேஸ்வரன் அவர்களும், ஸ்ரீசக்தி பவுண்டேசன் ஸ்த்தாபகர் டாக்டர்/திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும், சங்காரவேல் பவுண்டேசனும் அத்தோடு மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி லண்டன் கிளையினரும்; 2017 ஆண்டிற்கான புலமைப் பரிசில் நிதியை வழங்குகின்றார்கள். இவர்களுடன் புலமைப் பரிசில் நன்கொடையாளர்களாக ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி நிர்மலன் அவர்களும், டாக்டர்/திருமதி இராஜசுந்தரம் அவர்களும், திரு/திருமதி சுரேஸ் அவர்களும் தங்களது பங்களிப்புக்களை நல்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வருடம் பன்னிரண்டு மாணவர்கள் புலைமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.