இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் யு.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றுக்கு, வெள்ளிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
சட்டத்தரணி சங்கத் தலைவரையும் குழுவினரையும் வரவேற்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா உட்பட மாவட்டத்தின் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் யு.ஆர்.டீ. சில்வா பெறுமதியான சட்ட நூல்களையும் நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் வழங்கி வைத்தார்.
இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் ஒருவர், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தந்தமை, இதுவே முதற் தடவையாகும் என மட்டக்களப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.