கிழக்குப் பல்கலைக்கழக உள்ளுர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனைக் கொண்டாட்டமும்


பாரம்பரியக்; கண்காட்சியும்விற்பணையும்2018'மரபுக் கலையில் உறவுகொள்வோம்'எனும் தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் சு..சந்திரகுமார் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும், மிகப் பிரமாண்டமான கண்காட்சியும் விற்பணையும் எனும் நிகழ்வு 06.02.2018ஆம் அன்றுகாலை 10.00முதல் மாலை 6.00 மணிவரை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையாஞாபகர்த்த மண்டபத்தின் முன்றலில் ;நடைபெற்றது. இந்நிகழ்வானது தமிழ்இ முஸ்லிம், கிறிஸ்தவ மத அனுஷ;டானங்களுடன்  ஆரம்பமானதுடன். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்களும், சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசாரபீட பீடாதிபதி மு.ரவிஅவர்களும், அனைத்துபீட பீடாதிபதிகளும் அதனோடுதுறைத் தலைவர்களும் மற்றும் மாணவர்களும்கலந்து சிறப்பித்தனர்.

பாரம்பரியக் கைவினை உற்பத்திப் பொருட்கள் இன்றைய நவீன தொழிநுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக அழிவடைந்துவருவதனை விழிப்பூட்டும் வகையில், இந்நிகழ்வு அமையப் பெற்றிருந்தது. அத்தோடு, இங்குகாட்சிக்குட்படுத்தியிருந்த அனைத்துபொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகள் என்பனமாணவர்களின் அறிவுதிறனைக் அடிப்படையாகக் கொண்டுதயாரிக்கப்பட்டது.

இதன் போதுமேடை நிகழ்ச்சிகளாக கலைநடனம்இ பாடல்இ கவிதைகள் அரங்கேற்றப்பட்டதுடன் சிறப்பு அதிதிகளின் உரையும் இடம் பெற்றன. குறிப்பாக இந்நிகழ்வுகுறித்து உபவேந்தர் அவர்கள் பேசுகையில் 'இவ்வாறானநிகழ்வுகள் பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவது வரவேற்கப்படவேண்டியது என்றும் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நியச் செலாவனியில் அதிகளவு இப்பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மூலம் கிடைக்கப் பெறுகின்றது என்றும் இதனை வழிப்படுத்தி நாடாத்துகின்ற நுண்கலைத்துறையின் தலைவருக்கு வாழ்த்துக்கள் என்றும்' கூறினார். இதனைத் தொடர்ந்து அதிதிகளின் உரையும்நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்பாளராக மாணவன் எம்.ஐ.எம் புர்கான் தலைமையில்இ நுண்கலைத் துறைத் தலைவர் திருசு.சந்திரகுமார் அவர்களது பூரணவழிகாட்டுதலோடு இந் நிகழ்விற்கான பொறுப்புக்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகபிரிக்கப்பட்டு செவ்வனே நிறைவேற்றப்பட்டது. இவ் ஒழுங்கமைப்புக் குழுவில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் இவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும்இ ஒத்துழைப்புடனும் மகிழ்ச்சிகரமாகச் சேர்ந்து செயற்பட்டமை நல்லிணக்கத்திறன் வெளிப்பாட்டையும் காட்டியது. இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் புது வித அனுபவத்தினைப் பெறக்கூடியதாக இருந்தது.

இன்றைய உலகமயமாக்கற் சூழலில் மாணவர்கள் கூட்டாகச் செயற்பட்டு செயல் மையம் சார்ந்துவழிப்படுத்தப்படுவது அவசிமானது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உள்ளுர் உற்பத்திகள், அதன் தரம், அதற்கானகலை வெளிப்பாடுகள், தொழில் முனைவாக முன்னெடுக்கப்படுவது தொடர்பானவலுவாக்கம் பற்றிபுரிதல் அவசியமானது. பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தகட்டம் கைவினைசார்ந்த உற்பத்திகளைச் சுயமாகத் தயாரித்து தொழில் வழங்குனர்களாக வலுப்பெறுவதற்கான உந்துசக்தியாகவும் அமைந்தது. குழுச் செயற்பாடும், தொடர் செயற்பாடும், கூட்டுமுன்னெடுப்பும் ஆளுமைவிருத்தியையும் அவர்களுக்கிடையிலான புரிதலைவெளிப்படுத்தியது. இதனைமுன்னெடுக்கும் நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமாரின் அவர்களின் செயற்பாடு முக்கியமானது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்களும், கலைகலாசார பீட பீடாதிபதி மு.ரவி அவர்களும் ஏனைய நிருவாகத்தினரும் புலமையாளர்களும் பெருமைக்குரியவர்களுமாவர்.