திருகோணமலை தமிழ் மக்களை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்புவிடுக்கும் கிழக்கு தமிழர் ஒன்றியம்

கிழக்கு தமிழர்களின் இருப்பை அரசியல் ரீதியாக தற்காத்துக் கொள்வதற்கான 'பொறிமுறை' ஒன்றினை ஏற்படுத்திவருகின்ற "கிழக்கு தமிழர் ஒன்றியம்" திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களை ஒன்றுகூட்டி கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்றை எதிர்வரும் 04.03.2018 ஞாயிற்றுக் கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோன்ற ஒன்றுகூடல்கள் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் நடாத்தப்பட்டு சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் கொண்டுவருதல் வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானம் நிறைவேற்ப்பட்ட நிலையில், செயற்பாட்டுக் குழுக்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையில் செயற்பட்டுவருகின்ற இந்த கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகள் ஒன்றினைந்து செயற்பட்டு வருகின்றனர். எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தரப்பு ஆட்சியமைப்பதை சாத்தியமாக்கும் வகையில் மக்களை தயார்ப்படுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இம்முயற்ச்சிக்கு அனைவரதும் ஒத்துழைப்பினை வேண்டி நிக்கும் இவர்கள் இதுவரையில் பல தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் சம்மதங்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.