சாய்ந்தமருதில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 70வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்று சாய்ந்தமருது விழாக்கோல் பூண்டது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.

பள்ளிவாசல் தலைவர் ஹனிபா மஸ்டர் தேசியக்கொடி ஏற்றிவைத்து நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

முன்னொருபோதுமில்லாதவகையில் இம்முறை மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஹனிபா முன்னாள் பிரதேசசெயலாளர் சலீம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் படையதிகாரிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். கலசாரநிகழ்ச்சிகளும் நடந்தேறியது.

சுதந்திரதினவிழா ஊர்வலம் தேசியக்கொடியுடன் இடம்பெற்றமை கண்கொள்ளாக்காட்சியாக அமைந்திருந்தது.

( படங்கள் காரைதீவு நிருபர் சகா )