மட்டக்களப்பு, வாகரைப் பொலிஸ் பிரிவு கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதிரவெளி – புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தில் கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட குழந்தைவேல் சிங்காரவேல் (வயது 70) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டுத் திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி சைக்கிளில் பயணித்துள்ளார்.
அந்நேரம் வாகரைப் பக்கமிருந்து கதிரவெளிப் பக்கம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்ரெர் ரக வாகனம் முன்னாள் கிராம சேவகர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்து இடம்பெற்று முன்னாள் கிராம சேவகர் பலியானதை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளாகிக் கிடந்த கன்ரெர் வாகனத்தை எரியூட்டியுள்ளனர்.
அதேவேளை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பலியான முன்னாள் கிராம சேவகரின் சடலம் உடற் கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..