( வரதன், சிவகுமார்-கல்லடி )
தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்” எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நடை பவனி இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடுசெய்தன.
மட்டக்களப்பு, கல்லடி பாடுமீன் பூங்காவில் ஆரம்பமான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், இலங்கை தேசிய பாரிசவாத சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய நடை பவனி, பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வேபர் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் ஆறாயிரம் பேர் கலந்துகொண்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் தெரிவித்தார்.
பாரிசவாத அறிகுறிகள் தென்பட்ட ஒருவரை மூன்று மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றால் அதற்கான ஊசி மருந்தேற்றல் மூலம் குணமடைய செய்யக்கூடியதாக உள்ளது.
இந்த ஊசி மருந்தேற்றல் சிகிச்சைமுறை இலங்கையில் ஆறு இடங்களில் மட்டுமே காணப்படுவதாகவும் அதில் ஓர் இடமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுவது நம் பிரதேச மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இலங்கையில் பல மாவட்டங்கள் இருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நரம்பியல் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பில் இந்த நிகழ்வை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.