(புவி )
குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள் உச்சிப்பிள்ளையார் ஆலயத்தில் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக கிராம நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.தில்லை நடராசா, இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவி பணிப்பாளர்களாகிய திருமதி.ஹேமலோஜினி குமரன், .கர்ஜின் அவர்களும் குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன்,மாவட்ட உதவி செயலாளர் என்.பிரதீபன் ,மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.இலக்குமிதேவி ஶ்ரீதரன்,பெரியகுளம் கிராம உத்தியோகத்தர் சு.ராசலிங்கம் ,இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,ஆலய பரிபாலன சபையினர்,கிராம அபிவிருத்தி சங்கங்கள் ,அறநெறி ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




























