
[S.ஸஜித் & NR]
மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 30வது இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்வு மாமாங்க ஆலய பின் முன்றலில் சம்மேளன தலைவர் S.ஸஜித் இன் தலைமையில் நேற்று 18.03.2018 நடைபெற்றது.
மேற்படி விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கையிறு இழுத்தல் மற்றும் கபடி போட்டிகளை மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் ர.பிரவீனிண் வழிகாட்டலின் கீழ் அமிர்தகளி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடாத்திமுடிக்கப்பட்டது.
கையிறு இழுத்தல் போட்டியில் ஆடவர் பிரிவில் Fun-Guys இளைஞர் கழகமும் மகளிர் பிரிவில் அமிர்தகளி இளைஞர் கழகமும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டனர் மற்றும் கபடி போட்டியில் ஆடவர் பிரிவில் Tvs இளைஞர் கழகமும் மகளிர் பிரிவில் கயல்விழி இளைஞர் கழகமும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டனர். சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.




















