படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி ! ஊரையே சோகத்தில் ஏற்படுத்தியுள்ள சம்பவம்

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் தோணி கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (11) காலை, அல்லிப்பூ பறிப்பதற்கு தோணியில் சென்றவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட குறித்த ஐவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
குறித்த ஐவரும் நிலாவெளி, 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தர்மலிங்கம் தங்கதுரை (42), டி. சங்கவி (10), சுரேஷ் கேதிராஐ் (10), சுரேஷ் யுதேஷன் (07), சுதன் பிரனாவி (07) எனவும் தெரியவருகின்றது
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூ பறிப்பதற்காக குடும்ப
பெரியவருடன் நான்கு சிறார்களும் தோணியில் சென்றுள்ளனர்.
சடலங்கள் நிலாவெளி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.