மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 51 வீதமான மாணவர்கள் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சையில் 21 வீதமான மாணவர்கள் மட்டுமே சித்திபெற்று உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றிருந்தனர். ஆனால் இம்முறை 51 வீதமான மாணவர்கள் உயர்தர வகுப்பில் கல்விகற்க தகுதி பெற்றுள்ளனரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.