
[NR]
பேண்தகு பாடசாலை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்/ மட்/ கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பாடசாலை மட்டத்தில் 2018 பங்குனி 10 - 17 வரையான வார நாட்களில் கீழ் வரும் தலைப்புக்களில் சமுகத்துக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
1. சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்,
2. சிறுநீரகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்,
3. உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம்,
4. சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்.
5. போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்.
அவற்றில் மூன்றாவது நாளான 15.03.2018 இன்றைய தினம் அதிபர் திரு.த.அருமைத்துரை அவர்களின் தலைமையில் காலை ஒன்று கூடலின்போது மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கொடிகள் அணிவிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து போதைப்பொருள் பாவனையினைத் தடை செய்யும் வகையில் சமூகத்தை விழிப்பூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தி பாடசாலையின் பிரதான வாயிலுக்கு முன்னால் மாணவர்கள் அமைதியாக முறையில் தமது கருத்துக்களை சமூகத்துக்கு வழங்கியிருந்தனர். இதில் பெற்றோர், பழைய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
























