நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடமாகியும் துறைநீலாவணை பிரதான வீதிக்கு தெரு மின் விளக்குப் பொருத்தப்படவில்லை – மக்கள் விசனம்


(க.விஜயரெத்தினம் ,சா.நடனசபேசன்)
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை பிரதான வீதிக்கு தெரு மின்விளக்குக்கு பொருத்துவதற்கு 1.4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வருடமாகியும் அதற்கான எந்த வேலையும் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலைதெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட போக்குவரத்து வசதியற்ற கிராமம் துறைநீலாவணைஆகும்.

இக்கிராமத்திற்கு செல்லும் பிரதானபாதையான பெரியநீலாவணை சந்தி முதல் துறைநீலாவணை கிராமத்தின் பிரதானவீதி க்கு தெருவிளக்கு பொருத்துவதற்கு துறைநீலாவணை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்ததன் பயனாக இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் துறைநீலாவணை கிராமத்திற்கு தெருவிளக்கு பொருத்துவதற்கு தேசிய சகவாழ்வு நல்லிணக்க அமைச்சிடம் இருந்து ரூபா 14 இலட்சம் பெற்றுக்கொண்டு கடந்த வருடம்(2017) துறைநீலாவணை கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இஊடகவியலாளர்கள்இமின்சாரசபை பொறியியலாளர்இகளுதாவளை பிரதேச சபைச் செயலாளர்   போன்றோர்களை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து அவர்களின் முன்னிலையில் துறைநீலாவணை கிராமத்திற்கானதெருவிளக்கு பொருத்துவதற்குரிய உத்தியோகபூர்வமான கடிதத்தை மின்சாரசபை பொறியியலாளர்களிடமும்இதுறைநீலாவணை பொது அமைப்புக்களிடம் கையளித்தார்.

இத்தெருவிளக்கு பொருத்துவதற்கு இலங்கை மின்சாரசபை நிதியை பாரமெடுத்தும்  இன்றுவரையும் தெருவிளக்கு பொருத்துவதற்குரிய வேலையை ஆரம்பிக்கவில்லையென துறைநீலாவணை கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்இபொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

துறைநீலாவணை பிரதான வீதிக்கு தெருவிளக்கு பொருத்துவதற்குரிய நேர்த்தியான வேலையை ஆரம்பிப்பதற்குரிய  நடவடிக்கையை இலங்கை மின்சாரசபையின் கிழக்குப்பிராந்திய பிரதம பொறியியலாளர் அலுவலகம்இமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் போன்றோர்கள் எடுக்கவேண்டுமெனபொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்

இந்த வீதிக்கான தெருவிளக்குக்கான பெயர்ப்பலகை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொருத்தப்பட்டு இரண்டு மணித்தியாலயத்திற்குள் உடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை விடுத்து மாவட்ட செயலாளரால் இந்தக் கிராமத்தின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட தெருமின்விளக்கு உரியவேளைக்குப் பொருத்தாமல் வேடிக்கை பார்க்கப்படுவது புரியாத புதிராக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

துறைநீலாவணை பிரதான வீதிக்கு தெருவிளக்கு பொருத்துவதத்குரிய முன்னாயத்த திட்டமிடல்களை துறைநீலாவணை பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள்தான் மேற்கொண்டார்களே தவிரஎந்த அரசியல்வாதிகளும் துறைநீலாவணை கிராமத்தின்மீது கரிசனை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக பிரதான வீதிக்கு தெருவிளக்கைப் பொருத்துவதற்கு உடனடியாக அதிகாரிகள் தங்களது வேலைகளை நேர்மையாக செய்யவேண்டுமே தவிர எந்த அரசியல் வாதிக்கும் துணை போகக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்