
மட்டக்களப்பிற்கு தென்மேற்கே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பௌதிக வளப் புனருத்தாரணப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது (2018.03.30) ஆலய வளாகத்தில் மணல் பரவி சமப் படுத்தும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பெரும் நிதி முன்னெடுப்புடன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சிவகுருநாதன் அவர்களின் மேற்பார்வையில் இச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.





















