பட்டிருப்பு கல்வி வலயத்தில் 28 மாணவர்கள் 9 A சித்தி

(செ.துஜியந்தன்)
இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரணதரம் பரிட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்தில் 28 மாணவர்கள் ஒன்பது
பாடங்களிலும் ஏ சித்தியடைந்து வலயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக
வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

கடந்தவருடம் 14 பேர் ஒன்பது பாடங்களில் சித்தி பெற்றிருந்த நிலையில் இம்
முறை இரு மடங்காக 28 பேர் ஒன்பது பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இற்கமைய
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 11 மாணவர்கள்,
பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் 6 மாணவர்கள்,
களுதாவளை மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள்,
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள்,
 மண்டூர் இராமகிருஸ்ண வித்தியாலயம்  2 மாணவர்கள்,
கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலயம் மற்றும் துறை நீலாவணை மகா வித்தியாலயம், குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு மாணவர்களும் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

இதேவேளை; பட்டிருப்பு வலயத்தில் எட்டு பாடங்களிலும் 36 மாணவர்கள் ஏ
சித்தி பெற்றுள்ளனர்.

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 14 மாணவர்கள், தேற்றாத்தீவு மகா
வித்தியாலயம் 4 மாணவர்கள், பெரிய கல்லாறு மத்திய கல்லூரி 4 மாணவர்கள்,
செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 3 மாணவர்கள்,
களுதாவளை மகா வித்தியாலயம் 2 மாணவர்கள்,
துறை நீலாவணை மகா வித்தியாலயம் 2 மாணவர்கள்,
மண்டூர் 13இல் 2 மாணவர்கள்,
குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்,
மண்டூர் ஆர்.கே.எம். வித்தியாலயம்,
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலம்,
களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் , பாலமுனை பால முருகன் ஆகிய
பாடசாலைகளில் தலா ஒரு மாணவர்கள் எட்டு பாடங்களில் எ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.