கோட்டைமுனை மெதடிஸ்த திருச்சபையின் குருத்தோலை ஞாயிற்றுப் பவனி

(சிவம்)

இயேசுநாதர் மக்களை விடுவிக்க பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி வெற்றி வேந்தனாக எருசலேம் நோக்கிய பவனியை நினைவுகூரும் குருத்தோலை ஞாயிற்றுப் பவனி நேற்று (25) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

பவனிப் பாடலுடன் ஆரம்பமான பவனி திருச்சபையிலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதி, அருணகிரி வீதி வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது.
பவனியின் முடிவில் கோட்டைமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சபையின் வடக்கு கிழக்குத் தலைவர் அருட்பணி எஸ்.எஸ். ரேரன்ஸ் தலைமையில் வழிபாட்டு ஆராதனையை நடாத்தினார்.

ஆராதனையின் இறுதியில் கலந்து கொண்ட அடியாhகளுக்கு வீட்டடிற்கு கொண்டு செல்ல குருத்தோலை வழங்கப்பட்டது.