10 வயது சிறுமியின் கையப்பிடித்திழுத்த 60 வயது முதியவர் கைது



(எப்.முபாரக்)       
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து வயதுடைய சிறுமியொருவரின்  கையைப் துஷ்பிரயோக ரீதியில் பிடித்திழுத்த 60 வயதுடைய நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று (9) உத்தரவிட்டார்.   

பெரியபாலம், மூதூர், பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரே விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் பெரிய பாலம் பகுதியில் தேனீர் கடையொன்றினை நடாத்தி வரும் நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளைக் கையைப் பிடிப்பது, கட்டியணைப்பது போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், பத்து வயதுடைய சிறுமியொருவருக்கு துஷ்பிரயோக ரீதியில் கையைப் பிடித்திழுத்ததாக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.