மட்டக்களப்பில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 100 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், 9 வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக மாவட்ட நியமனங்கள் சேவைகள் அளவீட்டு அலகுகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சட்டவிரோத வர்த்தகத்தில் சிலர் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த வர்த்தக நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, மட்டக்களப்பு, ஒல்லிக்குளம், கல்லடி போன்ற நகரங்களிலுள்ள 9 வர்த்தகர்கள் மீதே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
இவர்கள் முத்திரையிடப்படாத தராசுகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைககளில் ஈடுபட்டமை, அனுமதி பெறாத தராசுகளைப் பாவித்தமை போன்ற குற்றங்களின் அடிப்படையிலேயே குறித்த வர்த்தகர்கள மீது சட்டநடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.













