இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 10 ஆயிரத்து 147 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த காலப்பகுதியில் 233 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதில் அநேகமான விபத்துகள் குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.













