கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவனைக் காணவில்லை

அம்பாறை – பொத்துவில் பகுதியில் கடலில் நீராட சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

அவர் மேலும் சில நண்பர்களுடன் நேற்று இவ்வாறு கடலில் நீராட சென்ற வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் காவல்துறை அதிரடிப் படை, கடற்படை மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சிறுவன், பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது