1843 கிலோ கிராம் பார மீன்களை டைனமைட்டை பயன்படுத்தி பிடித்த 6 பேர் கைது

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடற்பிரதேசத்தில் டைனமைட்டை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட ஆயிரத்து 843 கிலோ கிராம் பார மீன்களை விற்பனைக்கு கொண்டு சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகலொன்றுக்கு அமைய குச்சவெளி​ பொலிஸாரும் கடத்தொழில்,நீரியல் வளத்துறை அதிகாரிகளும் இணைந்து அவர்களை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.

இதன்போது சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.