காட்டு யானை ஒன்று வீதியின் குறுக்காக சென்றுள்ள போது, கெப் ரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் பயணித்துள்ள பாரவூர்தி கெப் ரக வாகனத்துடன் மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வத்தளை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் கெப் ரக வாகனத்தில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெப் ரக வாகனத்தில் 17 பேர் பயணித்துள்ளனர்.
கெப் ரக வாகனத்தில் பயணித்த பெண் ஒருவரும், பாரவூர்தியில் பயணித்துள்ள நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
விபத்தில் காயமடைந்த 02 பேர் வெலிகந்த பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 7 பேர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.















