பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுதியுடைய மதுபானம் , போதைப்பொருள் , புகைப்பொருட்கள் மற்றும் மது உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மதுவரி திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது 3 ஆயிரத்து 213 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , பொது இடங்களில் புகைத்தலில் ஈடுபட்ட 114 பேரும் மற்றும் சிறார்களுக்கு சிகரட் விற்பனை செய்த 24 பேரும் இதில் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.













