வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த  சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா  டெங்கு காய்ச்சலினால் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு டெங்குத் தொற்று காரணமாக உயிரிழந்த மாணவி,  பொதுச் சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார்.

கடந்த 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 1இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜதுர்ஸ்ரிக்கா (வயது 17), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.