உலகமயமாதலின் பிடியில் உள்வாங்கப்பட்ட உலகமானது தனது அன்றாட செயற்பாடுகளையும் நவீனத்துடன் பொருத்தும் வகையில் விரிவடைந்து காணப்படுகின்றது. இப்பின்னணியில் உலக மயமாக்களின் செல்வாக்கினை மக்களின் வாழ்க்கை பண்பாட்டு அம்சம், கலாசாரம், உணவுப்பழக்க வழக்கங்கள், மதவழிபாடுகள் என்று அனைத்திலும் அவதானிக்கலாம்.

அந்த அடிப்படையில் கூத்துக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், சடங்குடன் இணைந்த உள்ளுர் அறிவு திறன்கள், சமய வாழ்வுடன் இணைந்த சுற்றுச் சுழல் சார் முன்னெடுப்புக்கள் போன்றன நவீன உள்வாங்கல்களுடன் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் அன்றுதொட்டு இன்று வரை மாறுதல்கள் இன்றி பாரம்பரிய சடங்குநிகழ்வுகள் இடம் பெறுவது பற்றிய புரிதல் குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிதல் இன்றைய சமூகம் சார் கூட்டு வாழ்கைக்கு மிக்க அவசியமானது.
இயற்கை எழில் மிகு நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பிரதேசத்தில் தலவாக்கலை எல்ஜின் வீதிவழியே ஹென்போல்டில் இருந்து சுமார் 3மயில் தொலைவில் அமைந்துள்ள பசுமைமிகு தேயிலைகளால் சூழப்பட்ட அழகிய தோட்டமாக சென்றகுலர்ஸ் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு காட்டேரியம்மன் விழா உயிர் துடிப்புடன் நடைபெறுகின்றது. மலையகத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து கூலித் தொழிலுக்காக கொண்டு வரப்பட்ட மக்கள் தம்மோடு தமது கலாசாரம், பண்பாடு, மதவழிபாடு, சடங்குநிகழ்வுகள் ஆகியவற்றையும்; சுமந்தேவந்தனர்.
மலையகத்தில் தனித்துவமிக்க கலைகளான காமன் கூத்து, பொன்னர்சங்கர், குறவஞ்சிஆட்டம், காவடி, கோலாட்டம் போன்றனவும் இவ்வூரில் இன்றும் உயிர்ப்புடன் இயங்குவதைக் காணலாம். இந்த வரிசையில் மிக முக்கியமான அம்சமாகக் காட்டேரியம்மன் விழா கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டில் நாமக்கள் மாவட்டத்தில் நல்லிப்பாளையம் எனும் ஊரில் காட்டேரியம்மன் விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுவதும் அறிதலுக்குரியது.
இதன் அறாத் தொடர்ச்சியாகவே இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் சென்றகுலர்ஸ் தோட்டத்தில் அம்மக்களால் கொண்டாடப் படுகின்றது. இதற்குக் காரணம் இந்தியாவில் இருந்து வருகை தந்தமக்களில் பெரம்பலூர், நாமக்கள் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர் இவ்வூரில் குடியமர்த்தப் பட்டதினால் இவ்வூரில் காட்டேரியம்மன் விழா கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் கொண்டாடப்படுவதைப் போலவே சடங்குநிகழ்வுகள் இன்றும் இடம் பெறுவதை அவதானிக்கக் கூடியதாகஉள்ளது.
இன்று இச்சமூகத்தின் அடையாளமாக வலுவாகியுள்ளது.
காட்டேரியம்மன் விழாவானது சென்றகுலர்ஸ் தோட்டத்தில் வருடாந்த முத்துமாரியம்மன் திருவிழாவில் ஒருநாள் நடைபெறுகின்றது. பங்குனி மாதத்தில் இடம்பெறும் திருவிழாவில் எவ்வாறாயினும் காட்டேரியம்மன் விழாவினை செவ்வாய்க்கிழமையே நடாத்துகின்றனர். அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாக காட்டேரியம்மன் உள்ளது.

ஏழு அல்லது ஒன்பது பேர்களைக் கொண்ட குழுவாக நிகழ்வு இடம்பெறும். ஒருவர் காட்டேரியம்மனாகவும் ஏனையோர் உலக்கை ஏந்தி ஆடுபவர்களாகவும் காணப்படுகின்றனர். காட்டேரியம்மனானது உலக்கை ஏந்தி ஆடுபவர்களைத் துஷ்டர்களாக எண்ணி அவர்களை விரட்டியடித்து தீமையை விலக்கி நன்மையைப் பெருக்குவதாக அமைந்துள்ளது. அத்தோடு, காட்டேரியம்மனானது ஒரு மலையில் இருப்பதாகவும் அம் மலையை இடிக்க அரக்கர்கள் உலக்கையைப் பயன் படுத்துவதாகவும் அதனை விரட்டியடிக்கவே காட்டேரியம்மன் உருவெடுத்துள்ளது என மக்கள் நம்புகின்றனர்.
இது செவிவழிக் கதையாகச் சொல்லப்படுகின்றது.
காட்டேரியம்மனானது மிகவும் கரிய நிறத்தில் காட்சியளிக்கும். தலையில் நீளமான கூந்தல், கறுப்பு நிற பாவாடை மற்றும் உடல் முழுவதும் கறுப்புநிற அரிய தரம் பூசியும் காலில் சலங்கைகட்டியும் நாக்குமிக நீளமாக வெளியே தெரியும் படி காட்சியளிக்கும் ஆட்டு நாக்கு இறைச்சிக் கடையிலிருந்து ஒருவாரத்திற்கு முன்பே எடுத்துவரப்படும். அத்தோடு, கையில் சுளகு வைத்து இசைக்கு ஏற்ப வீசி வீசி ஆடும்.

உலக்கை ஏந்தி ஆடுபவர்கள் மிகவும் கறுப்பாகவும் உடல் முழுவதும் கருப்புநிற அரியதரம் பூசியும், கறுப்பு நிற காற்சட்டை அணிந்தும் காலில் சதங்கை கட்டியும் கையில் உலக்கை வைத்தும் தோற்றமளிப்பர்.
காட்டேரியம்மன் விழாவில் தப்பிசை மிகபிரதானமான, இசை வாத்தியமாகக் காணப்படுகின்றது. காட்டேரியம்மனானது அருளில் ஆட, உலக்கை ஏந்தி ஆடுபவர்கள் காட்டேரியம்மனின் முன்னேவந்து உலக்கையை முன்னே ஏந்தி ஏந்திஆடுவர். இதனால் கோவமடையும் காட்டேரியம்மன் கையில் இருக்கும் சுளகைவீசி எறிந்துதன் கோபத்தை மிகக் கொடூரமாக காட்டும். காட்டேரியம்மனின் இடுப்பில் வேட்டி கட்டி பின்னாடி இருந்துசிலர் பிடித்துக் கொள்ள அது கட்டுப் பாட்டிற்குள் ஆடிவரும்.
உலக்கை வைத்துள்ளவர்களில் ஒருவர் “பச்சை நாக்கு”என கூற ஏனையோர் “பாரமில்லை” என ஒன்றாகப்பாடுவர். இதற்கேற்ற தப்பிசையும் வழங்கப்படும். அத்தோடுஇ ஓஓ……ஹா என்றும் கூறுவர். காட்டேரியம்மனாக வேடம்தரிப்பவர் காட்டேரியம்மன் விழாவிற்கு முந்தைய நாள் நள்ளிரவு 12 மணிக்கு அருளோடு மயானத்திற்கு சென்று கைப்பிடியளவு மண் எடுத்துவருவார். இந்நிகழ்வு கட்டாயமான தொன்றாக உள்ளது. அம்மண்ணை சலித்து எடுத்துவைத்துக் கொள்வர். அடுத்தநாள் விழாவின் போதுஅம்மண்ணையே உணவாக உட்கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு,முட்டை,பால் போன்றனவும் பிரதான உணவாகக் காணப்படுகின்றது. இந் நிகழ்வானது ரோத முனிஆலயத்தில் ஆரம்பித்து சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்று இறுதியாக கோவிலை வலம் வந்து முடிவடைகின்றது. சென்றகுலர்ஸ் தோட்டத்தில் இவ்வாறான நிகழ்வு பாரம்பரியம் மாறாமல் இன்னும் இடம் பெறுவதானது மலையக தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தைப்பேணும் வகையில் அமைந்துள்ளது. பங்குகொள்ளும் சமூகத்தின் பக்தியுடனான வாழ்தலாகவும் ஆற்றுகையாகவும் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு எதிர்காலத்திலும் அதே சிறப்புடனும் வாழ்தலுடனும் கொண்டாடப்படுவது காலத்தின் தேவையாகும்.
ரா.சீத்தா
விடுகை வருடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்