போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசசெயலகத்தின் 2018 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக்குழுக்கூட்டம் (27) காலை 09.30மணியளவில் போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேசசெயலாளா; செல்வி இ.ராகுலநாயகி அவர்களின் ஆரம்ப நிகழ்வுடன் இடம்பெற்றது.

இதன்போது இணைத்தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 2017ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த வேலைத்திட்டங்கள் முடிவுறாத வேலைத்திட்டங்கள் 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் திட்டங்களின் முன்மொழிவுகள் பற்றியும் ஒவ்வொரு திணைக்கள தலைவர்களிடம் ஆராயப்பட்டது.
இதன்போது விவசாய திணைக்களம், கல்வி நீர்பாசன திணைக்களம், சுகாதாரம் பிரதேசசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், மின்சாரம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தேசியநீர்வழங்கல் வடிகால் அமைப்புசபை, அதிகாரிகளிடம் வினவிய போது இப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற குறைபாடுகள் மற்றும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள்.பற்றி ஆராயப்பட்டது.குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா, சீ.யோகேஸ்வரன்; திணைக்களதலைவர்கள் பொலிசார் மற்றும் பொதுஅமைப்புக்கள்; போன்றோர் கலந்துகொண்டனா.





















