இலங்கையின் கிழக்கில் வந்தடைந்த அமெரிக்காவின் மிதக்கும் மருத்துவமனைக் கப்பல்

அமெரிக்கா கடற்படையின் மிதக்கும் மருத்துவமனைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) வருகைதந்த குறித்த கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது.

இந்தக் கப்பல் 279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்டது. இதில் 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் காணப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பெரு, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 800 கடற்படை மற்றும் மருத்துவ பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.

குறித்த கப்பல் திருகோணமலையில் தரித்து நிற்கும் காலங்களில் பாடசாலைகள், மருத்துவனைகள் மற்றும் சமூக நிலையங்களில் மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளன.

பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த மிதக்கும் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.