கல்முனை தமிழ் இளைஞர் சேனையினரின் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு



சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ் இளைஞர் சேனையினரின் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஞாயிற்று கிழமை 08.04.2018 அன்று நடைப்பெற்றது. 

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு பாண்டிருப்பு சிவன் கோயில் வரை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கல்முனை இளைஞர் சேனை உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள், கல்முனை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனை கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் அண்மைய செயல்பாடுகள், கல்முனை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.