
(சிவகுமார், சசி )
மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவான கௌரவ மேயர் தியாகராஜா சரவணபவன், மற்றும் ஏனைய சபை உறுப்பினர்கள் அனைவரயும் பாராட்டிக் கௌரவிக்கும் விழா 28.04.2018 சனிக்கிழமை கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வினை கிராம மக்கள் சார்பாக சின்னத்துரை தேவசிங்கன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ஞா.சிறிநேசன், கௌரவ சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்.செல்வராஜா, கௌரவ பா. அரியநேத்திரன்
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கௌரவ கோ.கருனாகரம், கௌரவ இ. பிரசன்னா, தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரும்
கிராம பெரியார்கள், பொதுச் சேவகர்கள் , நலன்விரும்பிகள், மற்றும், ஊர் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுக் குழு சார்பில் பாராட்டிக் கௌரவங்கள் வழங்கப்பட்டது.
இதன் போது மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாடுக் குழு சார்பில் பாராட்டிக் கௌரவங்கள் வழங்கப்பட்டது.
















































