நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடுகளை, ரணவிரு சேவா திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தலைமையிலான குழு இன்று (23) பார்வையிட்டனர்.
வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் வழங்கப்படவுள்ளது.
குறித்த வீடொன்று தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த ரணவிரு சேவா பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கே குறித்த வீடுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














