இலங்கையில் இவ்வாண்டு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வாகன பதிவுகள் அதிகரித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 334 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளக்கிழமையுடன் இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 76 ஆயிரத்து 268 என அவர் மேலும் தெரிவித்தார்.