கல்லாறு சமுர்த்தி வங்கியின் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி


(ரவிப்ரியா)                 
கல்லாறு சமுர்த்தி வங்கியின் தொழிற் பிரதேசத்தை உள்ளடக்கிய மாபெரும் சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுப்போட்டி பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிறு பிற்பகல் சமுர்த்தி வங்கி முகாமையாளர் தவேந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக பாரம்பரியத்தை முதன்மைப்படுத்தி நடைபெற்றது.

சிறப்பு போட்டிகள் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.; குறிப்பாக முட்டை மாற்றுதல் விளையாட்டு ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தது.

முட்டி உடைத்தல் பலரின் குறி தவறியபோதும், ஒரு விரர் அதைத் தகர்க்க ரசிகர்களின்; கரகோசத்தால் காதடைத்து நின்றார். தேங்காய் துருவுதல். கிடுகு பின்னுதல். போட்டிகளில் பெண்கள் உற்சாகமாக்க கலந்து கொண்டனர். கயிறிழுத்தல். மெதுவாக மோட்டார் சைக்கிள் செலுத்துதல் யானைக்கு கண் வைத்தல் போட்டிகளும் புத்தாண்டு போட்டிகளுக்கு மெருகூட்டவே செய்தன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திட்ட முகாமையாளர் வே.வரதராஜன், திட்ட உதவியாளர் கே.வில்வராஜா ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.