முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரால் ஸ்தாபிக்கப்பட்டு கிழக்கிலங்கையில் புகழ் பூத்த பாடசாலைகளில் ஒன்றாய் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலை.
உயர் பண்பாடுகளுடன் கூடிய மாணவர்களை சிறந்த மனிதர்களாக சமுதாயத்திற்கு வழங்கிய பெருமையும் சிவாநந்தாவையே சாரும். அதனால், அங்கு படித்தவர்கள் தங்களை சிவாநந்தியர்கள் என பெருமையுடன் கூறிக்கொள்வதும் மரபாய் அமைந்துவிட்டது.
சிவாநந்தியர்கள் எனும் பெருமையோடு பாடசாலையில் படித்த பண்பாளர்கள் பலரின் தூரநோக்குப் பார்வையின் பலனாய் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்வாகக் கட்டமைப்புடன் கூடிய அமைப்பாக சிவாநந்தா பழைய மாணவர் சங்கம் தனது சேவையில் அடியெடுத்து வைத்தது.
இன்று அகவை அறுவதில் (60) வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் வைரவிழா நிகழ்வினையொட்டி பல்வேறுபட்ட நிகழ்வுகள் சங்கத்தின் தலைவர் திரு.மு.முருகவேல் தலைமையில் திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதில் வைரவிழா சிறப்பு மலர் வெளியீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பெறுமதிமிக்க ஆவணமாக வெளியிடுவதற்கு தரமானதும் சிறந்த உள்ளீடுகளையுடையதுமான ஆக்கங்கள் உலகெலாம் பரந்துவாழும் சிவாநந்தியர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும், பாடசாலையோடு தொடர்புடைய அரிய புகைப்படங்கள், குழுப்புகைப்படங்கள் என்பனவும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
வைரவிழா மலருக்கான ஆக்கங்கள் அனைத்தும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாக இருத்தல் வேண்டும். மேலும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத ஆக்கங்கள் மற்றும் வைரவிழா மலருக்கான ஆக்கங்களின் பொருத்தப்பாடின்மை முதலானவை நியாயப்படுத்தப்படுமிடத்து அவைகளை மறுபரிசீலனை செய்து நிராகரிக்கின்ற உரிமை பதிப்பாக்கக் குழுவிற்கு உண்டு.
ஆக்கங்களுக்கான அறிவுறுத்தல்கள்.
வைரவிழா மலரின் தரம் மற்றும் ஆக்கங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்காக வைரவிழா மலர் பதிப்பாக்கக் குழுவினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் படைப்பாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் கருதி சுகவீனமுற்றவர்களும் வயது முதிர்வின் காரணமாக ஆக்கங்களை எழுதமுடியாதுள்ளவர்களும் நேர்காணல் மூலமாக தங்கள் கருத்துக்களைக் ஆவணப்படுத்த விரும்பினால் பதிப்பாசிரியர் குழு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதனையும் இத்தால் அறியத் தருகின்றோம்.
ஆக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ அமைந்திருக்கலாம்.
தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் ஆக்கங்கள் அமையலாம்.
ஆக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ அமைந்திருக்கலாம்.
தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் ஆக்கங்கள் அமையலாம்.
படைப்புக்களின் வகைப்பாடு மற்றும் உள்ளடக்கங்களின் தன்மைகளைப் பொறுத்து சான்றாதாரங்கள் மற்றும் உசாத்துணைகள் ஆக்கங்களில் உள்ளடக்கப்படுவது அத்தியாவசியமானது.
எந்தவொரு ஆக்கங்களும் தனிப்பட்ட நபர், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை பாதிப்பவையாக இருத்தல் கூடாது.
முரண்பட்டதும் உண்மைத் தன்மையற்றதுமான கருத்துக்களை உள்ளடக்கிய ஆக்கங்கள் மலர் பதிப்பாக்கக் குழுவினால் நிராகரிக்கப்படும்.
ஆக்கங்களின் தரமேம்பாட்டை உறுதிப்படுத்துகின்ற கடப்பாடு பதிப்பாக்கக் குழுவின் தலையாய கடமையாதலால், இலக்கண இலக்கிய வழுக்கள் ஆக்கங்களில் அவதானிக்கப்படுமிடத்து அவைகளை சீர் செய்யும் உரிமை பதிப்பாக்கக் குழுவிற்கு உண்டு.
ஆக்கங்கள் மற்றும் படைப்புக்களை அங்கீகரித்தல் மற்றும் நிராகரித்தல் என்பனவற்றில் பதிப்பாக்கக் குழுவின் முடிவே இறுதியானது.
ஆக்கங்கள் அனைத்தும் மே மாதம் 30ம் திகதியன்றோ அதற்கு முன்பதாகவோ கிடைக்கப்பெறல் வேண்டும்.
படைப்புக்களின் வகைப்பாடு:
கட்டுரை, கவிதை, செய்தி, கதை, ஓவியம், மொழிபெயர்ப்பு, உரையாடல்கள், புகைப்படங்கள். ஆய்வுகள் மற்றும் பொருத்தமான படைப்பு வகைகள்.
ஆக்கங்களின் உள்ளடக்கங்கள் எவ்வாறு அமையலாம் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுக்கள்
- பண்பட்ட மனித சமுதாயத்தை உருவாக்குவதில் சிவாநந்தாவின் வகிபங்கு.
- ஆன்மீகத்தோடு இணைந்த கல்விக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சிவாநந்தா.
- விடுதி வாழ்க்கையில் நண்பர்கள் வட்டம்.
- ஆசிரியர்களின் அர்பணிப்புமிக்க சேவை.
- தலைமைத்துவப்; பயிற்சியின் களமாக சிவாநந்தா.
- இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளின் சொற்பொழிவுகள் தந்த படிப்பினை.
- சிவாநந்தியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி, தொழில்சார் வெற்றி முதலானவற்றிற்கு சிவாநந்தா எவ்வாறு காரணமாக இருந்தது.
- சமுதாயத்தில் நீங்கள் முன்னோடிகளாக திகழ சிவாநந்தா கற்றுக்கொடுத்த குறிப்பிடத்தக்க விடயங்கள்.
- நீங்கள் கண்ட சிவாநந்தாவும் தற்போதுள்ள சிவாநந்தாவும் நீங்கள் காண விரும்பும் சிவாநந்தாவும் முதலான விடயங்களை உள்ளடக்கிய ஒப்பீட்டாய்வுப் பார்வை.
- மறக்க முடியாத ஆசிரியர், அதிபர், பாடசாலை ஊழியர், நண்பர,; மிஷன் சுவாமிகள், விடுதி மேற்பார்வையாளர்.
- பாடசாலைக் கால சுவாரஸ்ய நிகழ்வுகள் மற்றும் அனுபவக் குறிப்புக்கள்.
- சிவாநந்தாவிற்கு உங்களின் செய்தி.
- சிவாநந்தியனாக உங்கள் அறிவுக் கண்ணோட்டம், ஆய்வுக் கண்டுபிடிப்புக்கள், தலைமைத்துவக் கருத்துக்கள், முயற்சியாண்மைக் கருத்துக்கள,; சமுதாய மேம்பாட்டுக் கருத்துக்கள், ஆன்மீகம் மற்றும் பல.
- சமத்துவ வாழ்வுக்கான பாதைக்கு வித்திட்ட சிவாநந்தா
- தனி மனித முன்னேற்றமூடாக சமூதாய முன்னேற்றத்திற்கு வித்திட்ட சிவாநந்தா.
- இவைகள் உதாரணங்கள் மட்டுமே. இவைகளுக்கு மேல் பொருத்தமான படைப்புகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.
- நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் நீங்கள் காண விளையும் சிவாநந்தா.
திரு.மு.முருகவேல்,
இல. 17. கங்காணிப்பிள்ளையார் கோயில் வீதி,
நாவற்குடா, மட்டக்களப்பு.
ஆக்கங்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி:
மேலதிக தொடர்புகளுக்கு,
திரு.மு.முருகவேல் 0777353437
திரு.காசுபதி நடராஜா 0773247132
கலாநிதி து.பிரதீபன் 0778436572
கலாநிதி து.பிரதீபன் 0778436572
திரு.கி.கிரீசன் 0754324559













